நீங்களும் அடிப்பித்தானே நினைச்சீங்க?.. ஆண்ட்ரியாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆகி, இதன்பினர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா. இவரை ரசிகர்கள் செல்லமாக ஆண்ட்ரியா பேபி என்று அழைப்பார்கள். ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவர், விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும், துணிச்சலிலும் பெயர் போன நடிகையாக இருந்து வருகிறார். இவர் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் "கண்ணும் கண்ணும் நோக்கியா, ஹூ இஸ் த ஹீரோ மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்" ஆகிய பாடல்கள் நன்கு பிரபலமானதாகும். இவர் நேரலையில் பாட்டு பாடுவார்.

சில படங்களுக்கு பின்னணி குரல் பதிவும் கொடுத்து வரும் நிலையில், ஆண்ட்ரியா அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திற்கு குரல் பதிவு செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனை விடியோவாகவும் பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். 

இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த நடிகை ஆண்ட்ரியா தலை கீழாக போஸ் கொடுத்துக்கொண்டு இருந்த புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தில் அவரது வீட்டின் மொட்டை மாடி செங்கல் நிறம் கிட்டத்தட்ட மனித உடலின் தோல் நிறத்தை ஒத்து இருந்ததால், ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி பின்னர் சுதாரித்தனர். இது குறித்த கமெண்ட்களை அவரது புகைப்படத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Andrea Jeremiah funny Instagram image


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->