அப்ப?..... சோகத்தில் யோகி பாபு ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


என்னதான் சினிமா துறையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும், அந்த துறையில் இருக்கும் ஆண்களுக்கு பொதுவாக ஒரு பெரும் பிரச்சனை இருக்கின்றது. இதே பிரச்சனைதான் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபுக்கும் இருக்கின்றது.

அதாவது சினிமாக்காரனுக்கு பெண் கொடுப்பதா என்று அவருடைய சொந்த பந்தங்கள் கூட பெண் கொடுப்பதில் தயக்கம் காட்ட 34 வயது ஆகியும், இன்னமும் அவர் பிரம்மசாரியாக இருந்து வருகின்றார். பல நேர்காணல்களில் திருமணமாகாத வருத்தத்தை அவர் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றார்.

yogi babu,

நடிகர் யோகிபாபு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அந்த பெண் இவர் தான் என்றும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. யோகி பாபு வேஷ்டி சட்டையுடன் அழகான ஒரு பெண் சேலையுடனும்,  இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகியிருந்தது.

இந்த நிலையில்., இந்த புகைப்பட பதிவை கண்ட நடிகை சபீதா ராய்., இது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும்., இதனை அவதூறாக இணையத்தில் பரப்பி வருவதாகவும் குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இதனால் யோகிபாபுவின் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor yogi babu movie stills leaked by marriage rumors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->