தளபதி 65 படத்தில் விஜயின் மாஸ் கெட்டப்.! லீக்கான புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜயின் ஒவ்வொரு திரைப்படமும் பார்த்து பார்த்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து படப்பிடிப்பு நடந்தாலும் கூட, அவர் படம் குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் இணையத்தில் சிலர் லீக் செய்து விடுகின்றனர். 

முன்னதாக, சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்க்கார் திரைப்படத்தின் எடுக்கப்பட்ட சோதனை புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது, மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற தளபதி 65 படத்தின் போட்டோ சூட் நேற்று நடைபெற்றுள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த போட்டோ ஷூட் நடந்துள்ளது. நடிகர் விஜய் போட்டோ ஷூட்டில் கலந்து கொள்ள வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்திலும் தலை முடி அதிகம் வைத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். அந்த வகையில், மாஸ்டர் கெட்டப்பிலேயே தளபதி 65 படத்திலும் விஜய் நடிக்க இருப்பதாகவும் இதற்காக கிட்டத்தட்ட மூன்று கோணங்களில் போட்டோஷூட் நடத்தப்பட்டு இருக்கிறது. 

இதில் ஏதாவது ஒரு கோணத்தில் தான் விஜய் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் பயன்படுத்திய கெட்டப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் லீக்காகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay thalapathi 65 getup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->