வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்..! - Seithipunal
Seithipunal


வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்..!

நடிகர் மற்றும் இயக்குநரான அமீரின் புதிய கஃபே திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி சென்றுள்ளார். அவருடைய புதிய கெட்டப், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி 'ஜவான்' படத்திற்குப் பிறகு தற்போது கரீனா கபூருடன் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கி காத்திருக்கிறார். மற்றொரு பக்கம் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, "கண்ணாடியும், ட்ரிம் செய்யப்பட்ட மீசையுமாக 80களின் கதாநாயகர்கள் கெட்டப்பில் தோற்றம் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கெட்டப் இயக்குநர் மிஷ்கினுடன் இணையும் புதிய படத்திற்காகவே என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கெட்டப் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "படப்பிடிப்பு முடித்துவிட்டு இதே கெட்டப்பில் போகலாமா என்று இயக்குநரிடம் கேட்டேன். அவர் கெட்டப் வெளியாவது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். அதனால், அதே கெட்டப்பில் வந்தேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathy new look photo viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->