நடிகராக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்.! - Seithipunal
Seithipunal


சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் அடியெடுத்து வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கக்கூடிய நடிகர்களின் வாரிசுகள் தங்களது அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் படங்கள் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இந்த படத்தில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அதாவது, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்திற்கான பூஜை நாளை சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோஸில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு விஜய் சேதுபதியுடன் சூர்யா ஒருசில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathi son act hero role in cinima


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->