தலைவர் 171 படத்தில் இணையும் பிரபல நடிகர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் உடன் தலைவர் 171 என்ற படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்னதாக இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்ற நிலையில், ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. அதிலும் குறிப்பாக ரஜினியின் மகனாக நடிகர் வசந்த் ரவி நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வதந்திகள் பரவியது. 

அந்த நேரத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் சூட்டிங் ஸ்பாட்டில் ஜெயிலர் பட நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாக பரவியது. ஆனால், அந்த புகைப்படங்கள் தனிப்பட்ட முறையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என்ற தகவல் பிறகு வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan joined work in thalaivar 171 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->