காளை 2 அப்டேட் கொடுத்த சிம்பு.?! மாஸான கெட்டப்பில், மிரட்டலான லுக்.. வேற லெவல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர். அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு தயாராவதற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்த நிலையில் இன்று (மார்ச் 18)ல் நடக்கவுள்ள பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார்.

அவர் தற்போது புதிய அவதாரத்துடன் தோன்றி ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். காளை பட கெட்டப்பில் வந்திருக்கும் அவர் ரசிகர்கள்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார். ஒருவேளை தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் படம் காளை 2-வாக இருக்குமோ என்று ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACTOR SIMBU KAALAI 2 SIMBU NEW LOOK


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->