பருத்திவீரன் பட பிரபலம் "செவ்வாழை ராசு" உடல்நல குறைவால் காலமானார்..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு (வயது 70) பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர். இவர் நலக்குறைவால் திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் பொணந்திண்ணி எனும் கதாபாத்திரம் நடித்தன் மூலம் புகழ் பெற்றார். அதேபோன்று மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாழை ராசு இன்று காலமானார். இவரின் மறைவுக்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sevazhai Rasu passed away due to ill health


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->