விரைவில் சூரியவம்சம் - 2.! நடிகர் சரத்குமார் கொடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 1997ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் சூர்யவம்சம் இன்று வரை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்தப் படத்தில் சரத்குமார் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். தந்தை எவ்வளவுதான் தன்னை வெறுத்தாலும், முக்கியத்துவம் தரவில்லை என்றாலும் தந்தைக்கு தன் இதயத்தில் உயர்ந்த ஒர் சிம்மாசனம் அமைத்து வைத்திருக்கும் மகனாக சரத்குமார் நடிப்பில் அசத்தியிருப்பார்.

இந்த படத்தில் தந்தை சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவும், மகன் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை தேவயானியும் நடித்திருப்பார்கள். இயக்குநர் மணிவண்ணன், மகன் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமாருடன் காமெடி, செண்டிமெண்ட் என நடிப்பில் அசத்திருப்பார். இந்த படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சூரியவம்சம் படத்தின் 2ம் பாகம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்தது

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி! விரைவில் சூர்யவம்சம் - 2!" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sarathkumar tweet Suryavamsam part 2 coming soon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->