நடிகர் சல்மான் கானின் டூப் மரணம்.. ஜிம் உடற்பயிற்சியின் போது ஏற்ப்பட்ட சோகம்.! - Seithipunal
Seithipunal



மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது சாகர் பாண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பல்வேறு படங்களில் டூப்பாக நடித்திருப்பவர் தான் சாகர் பாண்டே. இவரது தோற்றமும் சல்மான் கான் போல் உள்ளதால் இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கின்றன. இந்த நிலையில், அவர் செப்டம்பர் 30 ஆம் தேதியான நேற்று வழக்கம் போல உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு சென்றுள்ளார்.

அப்போது, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு மயங்கிவிழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு வயது 50.  

இந்த மரணம் தனக்கு வருத்தமளிப்பதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சல்மான் கான், “தில் சே ஷுகர், அடா கர் ரஹா ஹூன்." படங்களில் என்னுடன் நடித்ததற்கு என் இதய நன்றி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சாகர் அண்ணா #RIP #SagarPandey.” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Salman Khan body double Sagar Death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->