இவர் மட்டும் நடித்திருந்தால், முதல்வன் படம் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.! மிஸ் பண்ணிய ஸ்டார் நடிகர்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகம் மட்டுமல்லாமல் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது திரைப்படம் தென்னிந்திய திரை அரங்குகளை தாண்டி வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும்.

உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் இவரது படத்தை கண்டு களிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அண்ணாத்த. 

இந்த அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா ஆகியோர் முறை பெண்களாகவும் நயன்தாரா ஹீரோயினாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்து இருப்பார்கள். தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இத்தகைய நிலையில் ரஜினியின் மிஸ் பண்ணிய ஒரு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த முதல்வன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ரஜினிதானாம். இந்த படத்தின் கதையை முதலில் சங்கர் ரஜினியிடம் தான் கூறினாராம். ஆனால் அப்போது நடிகர் ரஜினி பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் முதல்வன் படத்தை மிஸ் பண்ணி விட்டாராம். பொதுவாகவே ஷங்கர் எந்த படத்தின் கதையை கையில் எடுத்தாலும் முதலில் ரஜினியிடம் பேசிவிட்டு அவர் மறுத்ததால் தான் மற்ற ஹீரோக்களிடம் செல்வாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor rajini missed muthalvan movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->