தளபதி விஜயுடன் இணையும் 90 ஸ் பிரபலங்கள்.! யார் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தளபதி விஜயுடன் இணையும் 90 ஸ் பிரபலங்கள்.! யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ’லியோ’ படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ‘தளபதி 68’ படத்திற்குத் தயாராக உள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் வி.எஃப்.எக்ஸ் பணிக்காக இயக்குநர் வெங்கட்பிரபு, விஜய் சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜோதிகா, பிரியங்கா மோகன், பிரபுதேவா என்று பல நடிகர்களது பெயர்கள் அடிபட்டன. தற்போது 90 ஸ் -களில் முன்னணியில் இருந்த இன்னும் சில நடிகர்களது பெயர்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும், இளம் வயது விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், மற்றொரு விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. 

ஆனால், ஜோதிகா மறுத்துவிட்டதால், இந்த பட்டியலில் சிம்ரன் இடம்பெற்றார். பின் சிம்ரனும் நடிப்பதற்கு மறுத்த நிலையில், தற்போது, நடிகை சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தளபதி 68’ படத்தில் நடிகர்கள் பிரசாந்தும், பிரபுதேவாவும் தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பிரபல நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா விஜயுடன் ’வில்லு’, ’போக்கிரி’ படங்களில் பணியாற்றினார்.

ஆனால், பிரசாந்த் உடன் அவர் பணியாற்றுவது இதுவே முதன்முறை. 90’களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தற்போது ‘தளபதி 68’ படத்தில் விஜயுடன் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prabhu deva and prasanth joined work with actor vijay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->