சூர்யா படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த ''வணங்கான்'' படத்தில் இருந்து விலகினார். 

இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா 42 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹைதராபாத்தில் சூர்யா 42 ஷூட்டிங் நடைபெற்ற போது நடிகர் சூர்யா பிரபாஸை சந்தித்து அவர் கொடுத்த விருந்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் பிரபாஸ் மற்றும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor prabhas possible to act in Surya 42 movie


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->