சிவராஜ்குமார், பிரகாஷ்ராஜை, காவிரி விவகாரத்தில் பாராட்டிய நடிகர் பார்த்திபன்!  - Seithipunal
Seithipunal


காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என அடுத்தடுத்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடக திரைப்பட நடிகர்கள் அனைவரும் போராட்டம் மேற்கொண்டனர். கன்னட நடிகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், போராட்டத்தில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்று பேசினார். 

இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் பேசவில்லையே என சர்ச்சைகள் எழுந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமூக ஊடகத்தில் தனது கருத்தினை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் காவிரிக்காக குரல் கொடுத்ததை விட, நடிகர் சித்தார்த்க்காக குரல் கொடுத்தது போலத்தான் தெரிகிறது.

அவருடைய பதிவில், ‘ஜெயிலர்’படத்தில் கிளப்பிய மாசை விட, நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு!!!! எதற்கு? மனதில் உள்ளதை "தில்" உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். 

நீண்ட (கால) காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு, ஒரு கலைஞனை காயப்படுத்தி ஆவதென்ன? அவர்கள்... 

எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட, அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சிவராஜ்குமார் எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது.

நீரின்றி அமையாது உலகு ! - திருக்குறள்" என நடிகர் பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor parthiban tweet about Cauvery issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->