நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் - நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

நேற்று நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நிச்சயமாக நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என பிரபல வில்லன் நடிகர் மீசை ராஜேந்திரன் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை உருவாக்கியவர். மேலும் நடிகர் சங்க கடனை அடைத்தவர். எனவே அவருக்கு பாராட்டு விழா நடத்துவது மட்டுமில்லாமல் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mesai Rajendran's demand to name Vijayakanth for Nadigar sangham building


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->