10-வது குழந்தைக்கு தந்தையான பிரபல நகைச்சுவை நடிகர்! - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி இவரது (வயது 57). இவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், பெல்லா ஜாஹ்ரா, ஜோலா இவி, ஷேனே ஆத்ரா, பிரையா என 4 மகள்களும் உள்ளனர். முன்னாள் மனைவி நிக்கோல் மிட்செல் மர்பி மூலமாக மைல்ஸ் மிட்செல் என்ற ஒரு மகனும் உள்ளார்.

மேலும், மெலானி என்ற பெண்ணின் மூலமாக ஏஞ்சல் ஐரிஸ் மர்பி பிரவுன் என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், பைகே பட்சர் என்ற பெண்ணை 2012-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். இந்தப் பெண்ணின் மூலம்  இஸ்ஸி ஊனா மர்பி என்ற மகள் உள்ளார்.

இப்போது பைகே பட்சருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை ஆண் குழந்தை. குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயர் வைத்துள்ளனர்.  இந்த குழந்தை மூலம் எட்டி மர்பி 10 குழந்தைகளின் தந்தை ஆகி உள்ளார்.

English Summary

Actor Eddie Murphy is 10th Baby


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal