அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அவ்வளவுதானா? சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் 62வது திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அஜித்குமாரின் 62வது படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி போஸ்டருடன் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது வரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனிடையே விடாமுயற்சி திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் மீண்டும் வெளிநாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி நார்வே, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் தொடங்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor ajith kumar bike tour abroad


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->