'துணிவு' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.. வைரலாகும் நடிகர் அஜித் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின்  போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் அஜித் துணிவு படத்திற்குத் டப்பிங் செய்யும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith dubbing studio in Thunivu movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->