பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.! பொது இடத்தில் செருப்படியை பதிவு செய்த நடிகை.!! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இந்த பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும்., திரைத்துறையில் அறிமுகமாகி எப்படியாவது மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புதுமுக நடிகைகள் மற்றும் இளம் பெண்கள் திரைத்துறையில் அறிமுகமாக விரும்புகின்றனர். அவ்வாறு திரைத்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று வரும் பெண்களை எந்த விதமான கூச்சமும் இன்றி வாய்ப்புகளை தருகிறேன்., என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள் என்று தயாரிப்பாளர்களாலும்., இயக்குனர்களாலும்., நடிகர்களாலும் கூறப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. 

உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகில் இந்த செயல்கள் அரங்கேறி வந்த நிலையில்., ட்விட்டரில் வைரலான மீ டூ ஹேஸ்டேக்கின் மூலமாக பல உண்மைகள் வெளிவர துவங்கியது. இந்த நிலையில்., மலையாளத்திரையுலகின் துணை நடிகையாக இருந்து வருபவர் சஜிதா. இவர் தனது முகநூல் பக்கத்தில்., நான் திரைத்துறையில் நடித்து வந்து கொண்டு இருந்த நேரத்தில்., என்னை கார்த்திக் என்ற உதவி இயக்குனர் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார். 

இதனை ஏற்ற நான் நடிப்பதற்கு சரி என்று தெரிவிக்கவே., குறித்த இயக்குனருக்கு ஒத்துழைக்க தயாரா? என்ற கேள்வியை முன் வைத்தார். இதனை கேட்டு அதிர்ச்சியான நான் நீங்கள் தான் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறினீர்கள்., நான் ஒத்துழைத்தால் தான் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கும் என்றால் எனக்கு அந்த வாய்ப்பு தேவையில்லை என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன். பின்னர் இது குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில்., இந்த இயக்குனருக்கு ஒத்துழைத்து படவாய்ப்பு பெற இந்த என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பதிவுள்ளார். 

இவரின் பதிவை கண்ட ரசிகர்களும்., திரையுலகினரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்., முகநூல் மற்றும் இணையதளங்கள் என்பது தற்போது பொதுஇடத்தை போன்று உள்ளது., இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்து வெளிக்கொண்டு வந்த உண்மையானது., அந்த நபருக்கு செருப்படி வழங்கியதற்கு சமம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Malayalam actress suja speech her Facebook page about try sexual abuse for movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->