சற்று உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை அதிகரித்ததால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 54 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 6,750 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் குறைந்து ரூ. 87 க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 87 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது