தங்கம் வாங்க சரியான நேரமா...? வார தொடக்கத்திலேயே தங்கம் சரிவு…! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் கடந்த மாதம் 1-ந்தேதி தங்கம் விலை திடீரென ஏற்றம் கண்டது. ஆனால் அதன் பிறகு சந்தையில் நிலைமைகள் மாறியதால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை வரை இருந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.815 வரை குறைந்ததுடன், ஒரு சவரனுக்கு ரூ.6,520 வரை விலை சரிந்தது.இந்த சரிவின் தொடர்ச்சியில் இருந்த தங்கம் விலை கடந்த சனிக்கிழமை திடீரென மீண்டும் உயர்வு கண்டது.

அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.720 அதிகரித்து ரூ.1,20,400-க்கு விற்பனையாக, ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை மீண்டும் திடீர் சரிவை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் நகை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு சிறு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி சில நாட்களின் தங்கம் விலை:
08-03-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
கடைசி சில நாட்களின் வெள்ளி விலை:
08-03-2026 – ஒரு கிராம் ரூ.290
07-03-2026 – ஒரு கிராம் ரூ.290
06-03-2026 – ஒரு கிராம் ரூ.290


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

right time buy gold Gold fell beginning week What price situation today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->