ஓலா S1 ஸ்கூட்டர்: விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே 10 ஆயிரம் முன்பதிவுகள்! - Seithipunal
Seithipunal


எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், தனது ஓலா S1 ஸ்கூட்டர் மாடலை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, இதன் விற்பனை துவங்கிய ஒரே நாளிலேயே சுமார் 10 ஆயிரம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், தனது ஓலா S1 ஸ்கூட்டர் மாடலை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, இதன் விற்பனை செப்டம்பர் 1-ஆம் தேதி துவங்கியது.

இதற்கான விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்‌.

மேலும், இந்த ஸ்கூட்டர்களின் வினியோகம் செப்டம்பர் 7-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு ஓலா எலெக்ட்ரிக் வலைதளம் மற்றும் ஓலா செயலியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• தோற்றத்தில் ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடையே எவ்வித மாற்றமும் தெரியாது.

• இந்த இரு ஸ்கூட்டர்களின் மெக்கானிக்கல் அம்சங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

• இதன்படி ஓலா S1 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

• ஓலா S1 ப்ரோ மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

• ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை விட S1 மாடலில் சிறிய பேட்டரியே வழங்கப்பட்டுள்ளது.

• ஓலா S1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 141 கிலோமீட்டர் வரை பயணிக்க செய்யும்.

• ஓலா S1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் பயணிக்க செய்யும்.

• ஓலா S1 மாடலில் எடையும் குறைவாகவே உள்ளது.

• ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களில் ஒரே மாதிரியான எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ola S1 Scooter 10 thousand bookings first day sale


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->