மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி கார் லான்ட்ச் டேட் அனவுன்ஸ்! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை வரும் செப்டம்பர் 8-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது அதன் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி டிசைன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதில் மஹிந்திராவின் புதிய லோகோ காணப்படுகிறது. புதிய XUV400 மாடல் ப்ரோடக்‌ஷன் வடிவில் காட்சியளிக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவிக்கப்பட்ட மஹிந்திராவின் ஆல் எலெக்ட்ரிக் கான்செப்ட்களை விட XUV400 மாடல் தனித்துவம் மிக்கது. 

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட் மாடலில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. புதிய XUV400 மாடல் XUV300 உருவாக்கப்பட்ட சங்யங் ரெக்ஸ்டன் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, இதன் ப்ரோடக்‌ஷன் வேரியண்ட் இதே போன்ற செட்டப் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரு வேரியண்ட்களும் நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

புதிய மஹிந்திரா XUV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும். இந்த கார் அதிகபட்சம் 150 ஹெச்பி பவர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra Electric XUV400 Car Launch


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->