மஹிந்திரா :  பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன்.! மாஸ் என்ட்ரி.! - Seithipunal
Seithipunal



மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசரை அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. 

அதில், எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க நீல நிற லைட்டிங் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.  இதன் தோற்றம் பொலிரோ போன்றே காட்சியளிக்கிறது. இதில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்றுள்ளது. மேலும், சதுரங்க வடிவில் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் குறிப்பிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை துவங்கி உள்ளது. இந்த வகையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக்‌ வாகனம், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra Bolero Pickup Truck Electric Version


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->