இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள்! - Seithipunal
Seithipunal


லம்ப்ரெட்டா நிறுவனம் புதிய ஸ்கூட்டர் மாடல்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக லம்ப்ரெட்டா நிறுவனம் பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது. மேலும் ரி எண்ட்ரி கொடுக்க பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.

லம்ப்ரெட்டா நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய  திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 2024 வாக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

லம்ப்ரெட்டா நிறுவனத்தின் பெரும்பாலான மாடல்கள் 200 சிசி முதல் 300 சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும். லம்ப்ரெட்டா நிறுவனம் இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் உள்நாட்டிலேயே தனது வாகன உற்பத்தியை துவங்கவுள்ளது.

லம்ப்ரெட்டா நிறுவனம், பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதை அடுத்து லம்ப்ரெட்டாவிடம் 51 சதவீத பங்குகளும், பேர்டு மொபிலிட்டி 49 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும்.

லம்ப்ரெட்டா வாகனங்கள், தற்போது உலகின் 70 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, உலகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை லம்ப்ரெட்டா விற்பனை செய்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lambretta scooters sale Indian market coming soon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->