2023 சுசுகி வி ஸ்டாம் 1050DE அறிமுகம்! - Seithipunal
Seithipunal


சுசுகி நிறுவனம் அதன் புதிய 2023 வி ஸ்டாம் 1050DE மேட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய DE வேரியண்ட் வி ஸ்டாம் 1050 ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இரு வேரியண்ட்களிலும் புதிய 5 இன்ச், ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், அப்-டவுன் குயிக்-ஷிப்டர், செண்டர் ஸ்டான்டு, ஹேண்ட் கார்டு, யுஎஸ்பி, 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த மாடலில் 1037 சிசி, லிக்விட் கூல்டு, 90 டிகிரி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த என்ஜின் 105.5 ஹெச்பி பவர் மற்றும் 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

• புதிய வி ஸ்டாம் 1050DE மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

• இரு மாடல்களிலும் 6 ஆக்சிஸ் IMU, லீன் சென்சிடிவ் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• மேலும் மேம்பட்ட ரைடு பை வயர் திராட்டில் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன், 3 ஸ்டேஜ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் மூன்று பவர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இதன் DE வேரியண்டில் ஆஃப் ரோடிங்கின் போது பயன்தரும் வகையில் புதிதாக G மோட் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

introduced 2023 Suzuki V stam 1050DE model


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->