வர்த்தகக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம். - Seithipunal
Seithipunal


வோஸ்ட்ரோ வங்கிக் கணக்கின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களை இந்திய ரூபாயில் மேற்கொள்ளலாம் ! 

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகமானது பெரும்பாலும் அமெரிக்க டாலரை சார்ந்த நடைபெறுகிறது. இதனால் இறக்குமதி செய்யும் போது இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறையும். மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் அமெரிக்காவால் பொருளாதார தடை செய்யப்பட்ட ரஷ்யா ஈரான் போன்ற நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் செய்வதில் சிக்கல் உள்ளது.

இதன் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுடனான பண பரிவர்த்தனையை இந்திய ரூபாயிலேயே மேற்கொள்ள தனது கொள்கையில் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்திய வங்கிகளில் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தை இந்திய ரூபாயிலேயே மேற்கொள்ள முடியும்.

 கடந்த ஜூலை மாதத்தில் ரிசர்வ் வங்கி வோஸ்ட்ரோ கணக்குகள் இந்திய வங்கிகளில் திறப்பதன் மூலம் இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் மேற்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும் இத்தகைய நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டது. தற்போது வர்த்தக கொள்கையில் இது தொடர்பான மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வகை வங்கி கணக்குகள் மூலம் இந்திய இறக்குமதியாளர்கள் வெளிநாட்டினருக்கு செலுத்த வேண்டிய தொகையை டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் செலுத்தினால் ஏற்றுமதியாளர்கள் அவர்கள்நாட்டு ரூபாயிலேயே பெற்றுக்கொள்ள முடியும். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இத்தகைய கொள்கை திருத்தத்தால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் எளிதாக வர்த்தகம் செய்ய இயலும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government brought an amendment in the trade policy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->