ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை எவ்வளவுத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், நகை கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

இருப்பினும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் விலை உயர்வை கூட பொருட்படுத்தாமல் தங்கம் எடுப்பதற்குச் செல்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலையை காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் உயர்ந்து 5425 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 360 ரூபாய் உயர்ந்து 43400 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 25 ரூபாய் உயர்ந்து 5450 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 43600 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி கிராம் ஒன்று 73.10 ரூபாய்க்கும், கிலோ 73100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->