ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு 400 உயர்வு.! - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு 400 உயர்வு.!

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5630 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 45040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 5680 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 45440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்று 81.40 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 81400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 04 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->