ஹெலிகாப்டரில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்து இளைஞர் கின்னஸ் சாதனை.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


அந்தரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி, புல்-அப்ஸ் எனப்படும் உடற்பயிற்சியை செய்து இளைஞர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 

ஹெலிகாப்டரில் தொங்கியபடி, ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்-அப்ஸ் உடற்பயிற்சியை செய்த மனிதர் என்ற சாதனையை நெதர்லாந்து தேசத்தை சேர்ந்த டேன் பிரவுனி மற்றும் அவரது நண்பர் அர்ஜென் ஆல்பர்ஸ் உடன் இணைந்து நிகழ்த்தி காட்டினார்.

பெல்ஜியம் நாட்டில் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி அவர்கள் இந்த சாகசத்தை நடத்தினர். இதற்காக தரைமட்டத்தில் இருந்து மேலே குறிப்பிட்ட அடி உயரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று, ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தது. 

அந்த ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு அர்ஜென் ஆல்பர்ஸ் ஒரு நிமிட நேரத்தில் 24 முறை புல்-அப்ஸ் செய்தா. அவரை தொடர்ந்து, டேன் பிரவுனி 25 முறை புல்-அப்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்தார். 

ஹெலிகாப்டரில் தொங்கியபடி, ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்-அப்ஸ் பயற்சியை செய்த மனிதர் என்ற சாதனை பட்டியலில், அர்ஜென் ஆல்பர்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். இது குறித்த வீடியோ கின்னஸ் உலக சாதனை யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth doing exercise while hanging from a helicopter sets a Guinness World Record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->