தைவான் நாட்டில் மருத்துவர்கள் மாநாடு, உலக அரங்கில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை!  - Seithipunal
Seithipunal


ஆசியா பசிபிக் நுரையீரல் மருத்துவர்கள் சங்கத்தின் வருடாந்திற மாநாடு, ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த சங்கத்தில் உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 5000 நுரையீரல் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்த ஆண்டு மாநாடு ஆனது தைவான் நாட்டு தலைநகரான தைபெய் நகரில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 3500  நுரையீரல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து  65 நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 65 நபர்களில் சென்னையை சார்ந்த மருத்துவர் ரெங்கநாதன், மருத்துவர் சந்திரசேகர்  மற்றும் கடலூர்  மருத்துவர் பால.கலைக்கோவன் ஆகிய மூவர் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டனர்.

நுரையீரல் நோய்கள் மற்றும் தூக்கமின்மை தொடர்பாக நான்கு நாட்கள் (November 29 - December 2) நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ் மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு வரவேற்பில் உலக மொழிகளில் 15 மொழிகளில் மட்டுமே வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடதக்கது

தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மருத்துவர்கள் அதிகமாக கலந்து கொண்ட போதிலும் , தமிழ் மொழிக்கு சிறப்பு செய்துள்ளனர். தமிழ் எழுத்துகளுடன் தமிழக மருத்துவர் மருத்துவர் பால.கலைக்கோவன், தைவான் மாநாட்டில்  கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

taiwan doctors conference honour tamil language


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->