பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த மாணவிக்கு கொடூர தலைமையாசிரியர் வழங்கிய கொடூர தண்டனை.! மொட்டை மாடியில் துடிதுடித்த பெண்.!! - Seithipunal
Seithipunal


இவ்வுலகில் பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் பல நடந்து கொண்டு வருகிறது., பெண்கள் தினமும் பல்வேறு போராட்டத்திற்கு மத்தியில் அவர்களின் படிப்பையும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு செல்லும் பள்ளிக்கு செல்லும் மாணவியர்களுக்கு பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக்குகிறது. 

அந்த வகையில்., ஒரு கொடூர சம்பவம் வங்காள தேசத்தில் அரங்கேறியுள்ளது. வங்காள தேசத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் டாக்கா. இந்த நகரில் வசித்து வரும் 19 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

இவர் கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது., பள்ளியின் தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வழங்கி வருவதாக கூறியுள்ளார். 

இதனை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., தலைமையாசிரியரை கைது செய்தனர். இந்த நிலையில் அதே பள்ளியை சார்ந்த மாணவர்கள் மற்றும் உள்ளூர் பகுதியை சார்ந்த அரசியல்வாதிகள் தலைமையாசிரியரை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் தலைமையாசிரியர் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில்., பள்ளியில் நடைபெறும் தேர்விற்கு வருகை தந்த மாணவியை பள்ளியில் மொட்டை மாடிக்கு., அவரது தோழி ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். 

அந்த சமயத்தில்., முகத்தை மூடி மாறுவேடத்தில் வந்து இருந்த தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட பெண்ணை புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளார். இதனை அவர் ஏற்க மறுத்ததை அடுத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி மாணவியை எரித்து கொலை செய்துள்ளார். தீயின் தாக்கத்தால் மாணவி அலறியபடியே சம்பவ இடத்தில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bangladesh school headmaster killed girl student when case filing sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->