பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஐ.எம்.எப். ஒப்புதல் - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கிணங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி திட்டத்தின் கீழ் 7 மற்றும் 8வது தவணையாக இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல கடினமான முடிவுகளின் மூலம் பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.டி.பி., உலக வங்கி, ஏ.டி.பி., ஏ.ஐ.ஐ., ஐ.எம்.எப். ஆகிய சர்வதேச நிறுவனங்களும், சீனா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, ஜப்பான், மற்றும் பிற நாடுகளும் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMF decides to provide 170 crore to Pakistan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->