தென்கொரியா || கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் 7 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தென் கிழக்கு நாடான தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திங்கட்கிழமை இரவு பெய்த கனமழையால் வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தலைநகர் சீயோல், மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் கியோங்கி மாகாணத்தில் ஒரு மணி நேரத்திற்கு 141.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் நகரம் முழுவதும் மூன்றாம் நிலை அவசர எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், 6 காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தலைநகர் சீயோல் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 107 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கள் வீடுகளை இழந்து பள்ளிகள் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் சியோல், இஞ்சியோன் உள்ளிட்ட 8 ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரயில்வே மற்றும் சுரங்கப்பாதை பிரிவுகளில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain lashesout cities in southkorea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->