கின்னஸ் சாதனை படைக்க முயற்சித்த இளைஞருக்கு பார்வை பறிபோன சோகம்.! - Seithipunal
Seithipunal


உலகத்தில் உள்ள சிலர் வழக்கத்திற்கு மாறான சில செயல்களை செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் சிலர் உலக சாதனைகளை படைக்கின்றனர்.

அதன்படி, இடைவிடாத சாகசம், சமையல் நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பலமணி நேரங்கள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு என்பவர் கின்னஸ் சாதனை படைக்க ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி, அந்த இளைஞர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது சாதனை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில், கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டதில் அவர் சுமார் 45 நிமிடங்கள் தனது கண் பார்வையை இழந்துள்ளார். மேலும் தலைவலி, கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 100 மணிநேரத்திற்கு மேலாக சமையல் செய்து சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guinness World record crying man blind in Nigeria


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->