கலிபோர்னியாவில் அதிவேகமாக பரவி வரும் காட்டுத்தீ: மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் அதீத வெப்பநிலை காரணமாக மரிபோசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

காட்டுத்தீ பரவியவுடன் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காட்டுத்தீ ஏற்பட்டு 6 மணி நேரத்திற்குள் சுமார் 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தீ பரவி சியரா தேசிய வனப்பகுதியை அழித்தது. மேலும் வனப்பகுதியில் உள்ள கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பலாக்கியது.

இதைத்தொடர்ந்து காட்டுத்தீ பரவி ஆங்காங்கே வெடிப்புகளை ஏற்படுத்துவதால், சியரா வனப்பகுதிக்கு அருகிலுள்ள நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் இதுவரை அழிந்திருப்பதாகவும், 6 ஆயிரம் பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extreme wild fire raveges in california


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->