அடுத்த ஆபத்து.. முதியவர்களை தாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ்.! - Seithipunal
Seithipunal


எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG 5.1 என அழைக்கப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் வேகமாக பரவி வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக அங்கு உள்ள மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளால் அவதிப்படுகின்றனர். மேலும், இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்தபோது, இந்த தொற்று ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் தொற்று என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இங்கிலாந்தில் 7 பேரில் ஒருவருக்கே பரவி இருப்பதாகவும், கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முந்தைய கொரோனா வைரஸ்களை விட எரிஸ் மிகவும் ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது தான் வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதேபோல் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் வேகமாக பரவுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது.

இங்கிலாந்தில் பாதிப்பு அதிக அளவில் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று வயதானவர்களிடம் தான் அதிக அளவில் தாக்கியுள்ளாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eris variant covid spread in England


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->