குறுகிய காலத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்து எலான் மஸ்க் கின்னஸ் சாதனை.!   - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்திருந்தார். 

அதன் படி, அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை தன்வசப்படுத்தினார். அதற்கான தொகையை செலுத்துவதற்காக எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு தொடங்கினார். 

இதையடுத்து, எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதாவது, 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதன் காரணமாக அவர் மீது சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர். 

இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்ததன் மூலம், உலகின் முதல் பணக்காரர் என்கிற பெருமையை அவர் இழந்தார். இந்நிலையில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 320 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 137 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 

கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை அவர் இழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. அதன் படி, மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்று கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elon musk guinness world record for loss personal wealth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->