பருவநிலை மாற்றத்தால் 2,100-ம் ஆண்டில் உலக நாடுகளில் வெப்பம் 3 மடங்கு அதிகரிக்கும்.! ஆய்வில் தகவல் - Seithipunal
Seithipunal


புவிவெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸிற்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதனால் வெப்ப அலை மற்றும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பருவகால விஞ்ஞானி லூக்காஸ் ஜெப்படெல்லோ தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பருவ காலநிலை மாற்றத்தின் விளைவால் 2,100-ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வரும் காலத்தில் வெப்பநிலையானது 51 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டுக்கு ஒன்று முதல் 4 வாரங்கள் வரை அதிக வெப்பநிலையை இந்த நூற்றாண்டின் இறுதியில் சந்திக்க கூடும் என்று லூக்காஸ் ஜெப்படெல்லோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due climate change temperature will become triple times by 2100


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->