பிலிப்பைன்ஸ்: 317 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் இருந்து 317 அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதாகி நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர்.

இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆண்டை நாடுகளுக்கு கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.

இந்நிலையில் இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 317 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதற்கிடையே கப்பலை இயக்கியவர் அங்கிருந்து தண்ணீரில் குதித்து தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் இலங்கை அகதிகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A ship with 317 Sri Lankan refugees adrift in Philippines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->