கொல்கத்தா அணி அபார வெற்றி..ப்ளேஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட்டில் அடிமேல் அடி வாங்கி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது முறையாக தோல்வியை தழுவி அடுத்த சுற்று பிளேஆப் வாய்ப்பை இழந்துள்ளது. 10  அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 51 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சேம்பியான மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து விக்கெட் கீப்பர் பில் சால்ட்டும் சுனில் நரேனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மும்பை அணியின் வேகப்பந்து பேச்சாளர் நுவான் தூஷாரா முதல் ஓவரிலே பில் சால்ட் விக்கட்டை கை பற்றினார். 19.5 ஓவர்களில் அனைத்து விகட்டுகளையும் இழந்து கொல்கத்தா அணி 169 ரன்களை குவித்தது.

பின்னர், 170 ரன் இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் 13 ரன்களுக்கும் நமன் 11ரன்னுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர். மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kolkata team won the match Mumbai team lost the chance of playoff


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->