ஜப்பானின் ஒரே அறிவிப்பால் ஆடிப்போன உலக நாடுகள்.! எச்சரிக்கை விடும் ஐடபுள்யூசி..!! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் இருக்கும் மக்களால் அதிகளவில் திமிங்கலத்தின் இறைச்சியானது விரும்பி உண்ணப்படுகிறது. அங்குள்ள கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் பல வருடங்களாக உண்டு வந்தாலும்., இரண்டாம் உலகப்போரின் பின்னர் இறைச்சிக்காக வேட்டையாடுவதை குறைத்துக்கொண்டனர். 

சில வருடங்கள் கழித்த பின்னர் ஜப்பான் அரசாங்கமானது ஆராய்ச்சிக்காக அதிகளவு திமிங்கலங்களை வேட்டையாட துவங்கியது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் இறைச்சிக்காக திமிங்கலமானது வேட்டையாடப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த சுற்றுசூழல் ஆர்வலர்களின் காரணமாக கடந்த 2014 ம் வருடத்தில் சர்வதேச நீதிமன்றமானது திமிங்கலங்களை வேட்டையாட கூடாது என்று தடை விதித்தது. 

நீதிமன்றத்தின் உத்தரவை ஒரு வருடம் ஏற்ற ஜப்பான் அரசானது ஒருவருட காலம் அமைதியாக இருந்துவிட்டு., மீண்டும் தனது வேட்டையை துவங்கியது. மேலும்., தற்போது வரும் ஜூலை மாதம் முதலாக வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டையில் ஈடுபட போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. 

இது குறித்து ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்ததாவது., ஜப்பானின் கலாச்சாரத்தின் திமிங்கலங்கள் இறைச்சியை சாப்பிடுவது ஒரு அங்கம் ஆகும்., இதன் காரணமாக மீண்டும் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடப்போகிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஐடபுள்யூசி., ஜப்பானின் இந்த அறிவிப்பிற்கு கடுமையான பின் விளைவுகளை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்., பல அறிய வகை திமிங்கலங்களை ஜப்பான் இனி வேட்டையாடிவிடும் என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a japan country hunt whales


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->