தருமபுரியில் கொளுத்தும் வெயில்! மக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 100.4 டிகிரி அளவில் வெப்பம் இருந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சுத்தமாக பொய்த்து விட்டது. இதனால் இந்த வருடம், மார்ச் ஆரம்பம் முதலே வெயில் கொளுத்த தொடங்கியது. மார்ச் 20ம் தேதி 101 டிகிரியாக இருந்த வெயில், அதன்பின் தினமும் 90 முதல் 98 டிகிரி வரை இருந்து வந்தது. 

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பக்காற்று வீசி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் 100.4 டிகிரியாக அதிகரித்துள்ளது. 

கொளுத்தும் வெயிலால் பகல் வேளையில் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை குறைக்க மக்கள் இளநீர், வெள்ளரிப்பழம், முலாம்பழம், நுங்கு, எலுமிச்சை ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்ச்சியானவற்றை அருந்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warm sun People are suffering


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->