திமுகவிற்கு செக் வைக்கும் வைகோவின் பேச்சு!! ஆட்டம் காணுகிறதா? திமுக கூட்டணி!!  - Seithipunal
Seithipunal


கோரிக்கைகளின் அடிப்படையில் அதிமுக உடனான கூட்டணியில் பாமக இன்று இணைந்தது. இது குறித்து, "காவிரி நீர் பாசனம், கோதாவரி, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, மணல் குவாரிகளை படிப்படியாக மூடல், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றல், ஏழு பேர் விடுதலை,

புதிய அணை கட்டல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்ற அதிமுகவின் வாக்குறுதி அடிப்படையில் தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஒருபுறம் திமுக ஸ்டாலின் அதிமுக-பாமகவின் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். மற்றொரு புறம் திமுகவின் தோழமை கட்சியான வைகோ பாமகவின் இந்த கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 

அதிமுக திமுக மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதே போல் எடப்பாடியின் ஆட்சியை பாமகவை தவிர வேறு யாராலும் அவ்வளவு விமர்சனம் செய்திருக்க முடியாது.

அவ்வாறு இருக்கையில் அதிமுகவுடன் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை 'திராவிட கட்சியை விமர்சித்து விட்டு தற்பொழுது எப்படி கூட்டணிக்கு ஒப்பு கொண்டார்கள்' என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தரம் குறைந்த வார்த்தைகளால் பாமகவை திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார். 

ஆனால், இனி காங்கிரசுடன் கூட்டணி எப்பொழுதும் கிடையாது என 2014 ல் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து விட்டு தற்பொழுது காங்கிரசுடன் மாமா பொண்ணு அதை பொண்ணு என பழகி வருகிறோம் என காங்கிரஸார் கூறும் அளவிற்கு வெளிப்படையான கூட்டணியை அமைத்துள்ளனர்.

இந்த அதிமுக பாமக கூட்டணி குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ, "சமூக நீதிக்காக போராடியவர் ராமதாஸ்! என்றும், கூட்டணி வைப்பது குறித்து விமர்சித்தால் இந்தியாவில் எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது!" என பாமகவுக்கு ஆதரவாக தனது அரசியல் அனுபவத்தில் பக்குவமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். 

இப்படி ஒரு அணியில் திரண்ட இரு கட்சிகளும் மாற்று கருத்துக்களை முன்வைப்பதற்கான காரணம் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் கருத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

மேலும், பாமகவை திமுக இழுக்க முயன்றது அது நடக்காத பட்சத்தில் ஸ்டாலின் இப்படி ஒரு விமர்சனத்தை முன் வைக்கிறாரே ஒழிய கூட்டணி அரசியல் ஒன்றும் அவரது பிரச்னை இல்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், வைகோ, " நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை திமுகவே கூறும்" என ஸ்டாலினை மிரள வைக்கும் விதமாக வைகோ கூறியிருப்பது அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயமாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says about pmk admk coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->