அதிமுக - பாஜக கூட்டணி முறிவு - டிடிவி தினகரன் நறுக் பேட்டி! - Seithipunal
Seithipunal



அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் கூட்டணியில் இருந்தார்கள். இப்போது கூட்டணியில் இல்லை. 

இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் இதை தவிர இதில் பார்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. அம்மாவைப் பற்றி பேசியபோதே அமைதியாக இருந்த அதிமுகவினர். அதன் பிறகு டெல்லிக்கு சென்று கூட்டணி பற்றி எல்லாம் பேசிவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் படை எடுத்து டெல்லிக்குச் சென்று ஒன்று செய்ய முடியாததால், ஏமாற்றத்தின் காரணம்தான் இந்த முடிவு என்று தெரிகிறது.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பேசினார்கள். எனவே நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று சொல்லி கொண்டு உள்ளார்கள். ஆனால் அதைத் தாண்டி வேற ஏதோ காரணம் இருக்கிறது என்று தான் தெரிகிறது.

புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் இருந்ததுதான் உண்மையான அதிமுக. இப்போதைய இருப்பது கையகப்படுத்தப்பட்ட, களவாடப்பட்ட அதிமுக தான்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Say About ADMK BJP Alliance break


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->