தேர்தலுக்குப் பின்னும் கட்டுப்பாடு தொடரும்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கும் போது தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உறக்கம் கொண்டு செல்ல இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் வியாபாரிகளும் பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

10 லட்சம் ரூபாய் வரை வியாபாரிகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. 

இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு தொடரும் என அறிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியின் இந்த அறிவிப்பால் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ECI chief announced money movement restriction will continue after poll


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->