திருவள்ளூர் | போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், திருத்தணி ஆர்.கே பேட்டை பேருந்து நிறுத்தத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இன்று காலை 8 மணி அளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை சார்பில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தமிழக முழுவதும் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் இந்தியாவில் போலியோவை ஒழிப்பதற்காக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur minister started polio drip campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->