தேனி அருகே மாயமான மாணவர்களை மீட்ட நாமக்கல் போலீசார்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


தேனி, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் பரத் (வயது 13), பால்பாண்டி என்பவரது மகன் சிவனேஸ்வரன் (வயது 13). 

இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றவர்கள் மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களின் புகைப்படங்களை வைத்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். 

இதற்கிடையே மாயமான 2 மாணவர்களும் நாமக்கல், நல்லூர் அருகே உள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த நல்லூர் போலீசார் மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து விசாரணை நடத்தினர். 

அப்போது மாணவர்கள், தாங்கள் தேனியைச் சேர்ந்தவர்கள் என்றும் இங்கு நடைபெறும் கபடி போட்டியை பார்ப்பதற்காக இருவரும் வந்தோம் என தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உடனடியாக தேனி மாவட்ட எஸ்.பிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மயிலாடுதுறை போலீசார் 2 மாணவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni students missing rescue Namakkal police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->