விழுப்புரம்: ஒரு பள்ளி ஆசிரியர் மீது... இரு பள்ளி ஆசிரியைகள் காதல்..!! தலைமுடியியை பிய்த்து கொண்டு சண்டை போட்ட கேவலமான சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


பள்ளி ஆசிரியர் ஒருவருக்காக அதே பள்ளியில் பணி புரியும் இரு சக ஆசிரியைகள் தலைமுடியை பிய்த்துக்கொண்டு சண்டை போட்ட கேவலமான சம்பவம் விழுப்புரம் அருகே அரேங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அருகே இலவனசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ''விஜயகாந்த்''. இவரும் இவ்வருடம் பணியாற்றும் சக ஆசிரியை புவனேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும், ''தமிழ் மகள்'' என்பவர் விஜயகாந்த்துடன் நெருக்கம் காட்டி காதலிப்பதாக விஜயகாந்திடம் கூறியுள்ளார்.

இந்த விடயம் புவனேஸ்வரி காதுக்கு செல்ல, அவர் நேரடியாக சென்று தமிழ் மகளிடம் பிரிந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் தமிழ் மகள் விஜயகாந்த்தை விடாமல் சுற்றி வந்துள்ளார்.

இதனால் கடுப்பான புவனேஸ்வரி அந்த பள்ளி வளாகத்திலேயே தமிழ் மகள் தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கவே, இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதை மாணவர்கள், சக ஆசிரியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனிடையே, புவனேஸ்வரியின் உறவினர்களுக்கு தகவல் தெரியவே, சுமார் 50 பேர் அங்கு வந்து, ஆசிரியை தமிழ் மகள் மற்றும் விஜயகாந்த்துக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். போலீசார் தலையிட்டு அவர்களை விரட்டிவிட்து, விடயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமிக்கு புகாராக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவின் பேரில், 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் பெரிய விடயம் இல்லை. எனவே இவர்கள் போன்றவர்களை பணியை விட்டே தூக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TEACHERS FIGHT FOR LOVE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->