கனிமொழியை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை!! யார் புதிது?!  - Seithipunal
Seithipunal


தமிழக பாராளுமன்ற தேர்தலில் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது தூத்துக்குடி. காரணம் இங்கு திமுக கூட்டணி சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக தமிழிசையும் நேரடியாக களத்தில் இறங்குகின்றனர். இருவருமே ஒரு பெண் என்பதால் தேர்தல் முடிவு அனைவராலும் சுவாரசியமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இருவருமே தூத்துக்குடியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக வேட்பாளர் கனிமொழி இந்த தொகுதிக்கு தமிழிசை புதுசு அவர் இறக்குமதி செய்யப்பட்டவர். தூத்துக்குடி மக்களை பற்றி அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, "தூத்துக்குடிக்கு யார் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்பது, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். வீடியோ ஒன்றை அந்த வீடியோவில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி என்னை இறக்குமதி செய்யப்பட்டவர் என விமர்சிக்கிறார்.

நான் தூத்துக்குடிக்கு புதிது என்றெல்லாம் கூறுகிறார். நான் தூத்துக்குடி தென் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மண்ணின் மகள் அது மட்டுமல்ல எனது தந்தையும் இந்தப் பகுதியைச் சார்ந்தவர் தான். எனது தாயும் இதே பகுதியைச் சேர்ந்தவர் தான். எனது தாய் தந்தை இருவருமே பிறந்த ஊர். நம்மை போன்று எளியவர்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

சொல்லப்போனால், இந்த போட்டியில் தொகுதியில் எதிரணியில் போட்டியிடுபவர்களுக்கு இந்த தொகுதியில் என்ன உரிமை இருக்கிறது? என்று எனக்கு தெரியவில்லை யார் வேண்டுமானாலும் ,எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரி என்பதை மிக அழுத்தமாக கூறுகிறேன். இதை நான் வலியுறுத்துவேன் உங்கள் சகோதரியாக உங்களை நோக்கி வருகிறேன் வாக்களியுங்கள் தாமரைக்கு.!!" என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILISAI SAYS ABOUT DMK KANIMIZHI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->